இரு மாணவிகள் போதை மயக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில்

Report Print Steephen Steephen in சமூகம்

கல்கிஸ்சையில் உள்ள பிரபல பாடசாலையில் பயிலும் இரு மாணவிகள் அருகில் உள்ள கடையொன்றில் வாங்கி உண்ட இனிப்பு காரணமாக போதை மயக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரே இனிப்பு சாப்பிட்டு போதை மயக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவ் என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த இனிப்பை சாப்பிட்டு குறித்த மாணவிகள் போதை மயக்கத்திற்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து மாணவிகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனிப்பை விற்பனை செய்த கடையை சேர்ந்த சந்தேகநபர்களான தெஹிவளை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் ரிஸ்லி றிசார்ட், மொஹமட் றிசார்ட் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, விற்பனை செய்யப்பட்ட இனிப்பு, பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த பாடசாலையின் அதிபர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.