அரசியல் கைதிகளுக்காக உண்ணாவிரதத்தில் குதித்த வவுனியா மக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்கள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை முதல் மாலை 4 மணிவரை குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் இடம்பெறும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் காலை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் தமது போராட்டம் ஆரம்பமாகும் என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றுடன் 233ஆவது நாளாக வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.