சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் - எலிபட தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று நள்ளிரவு நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் எலிபட மற்றும் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சந்தேகநபர்களை விசாரணைகளின் பின் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.