மின்னல் தாக்கத்தினால் தீப்பிடித்து எரிந்த மின்மாணி! மட்டக்களப்பில் சம்பவம்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை - கிண்ணையடி பகுதியில் மின்னல் தாக்கியதில் குறித்த பகுதியில் இருந்த வீடு ஒன்றின் மின்சார பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை கிண்ணையடி பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் க.லிங்கராசா என்பவரின் வீட்டிலேயே இந்த மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கம் காரணமாக வீட்டில் பொருத்தப்பட்டமின்மானி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் வீட்டின் சுவர் உட்பட வீட்டின் மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, வீட்டின் உரிமையாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.