வாகரையில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Report Print Navoj in சமூகம்

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வாகரைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அ.அமலினி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கச்சான் 85 பேருக்கும், சோளம் 58 பேருக்கும், மேசன் உபகரணம் 15 பேருக்கும், மண்வெட்டி 88 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.றிஸ்மின், கிராம சேவை உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளர்.