விலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

சுமார் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விலங்கு புலனாய்வு நிலையம், மத்திய கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆரியதாச தலைமையில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால் மற்றும் கால்நடை வைத்திய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.