லக்ஸ்மன் கிரியல்ல மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Kari in சமூகம்

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கல்லடியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேந்திரனின் அழைப்பிற்கு இணங்க இன்று மாலை கட்சியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பாக கட்சியின் அமைப்பாளர்கள் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளதுடன் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சி அங்கத்தவர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.