மஸ்கெலியாவில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மஸ்கெலியா - பிரவுண்லோ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு முச்சக்கரவண்டிகளிலும் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய இரு முச்சக்கரவண்டிகளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.