போலி லொத்தர் சீட்டுக்களுடன் ஒருவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

போலியான லொத்தர் சீட்டுக்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடப்புஸ்ஸல்லாவ பகுதியில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்யததோடு அவரிடம் இருந்து போலியான லொத்தர் சீட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞரிடம் இருந்து 3,629 லொத்தர் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10.12.2017 திகதிக்கு அமைய அச்சிடப்பட்டிருந்த குறித்த லொத்தர் சீட்டுகள் ‘அபிவிருத்தி லொத்தர் சபையின்’ சீட்டுகளை போன்று போலியாக அச்சிடப்பட்டிருந்ததோடு, ஒரே தொடரிலக்கத்தில் நூற்றுக்கணக்கான லொத்தர் சீட்டுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த போலி லொத்தர் சீட்டுகளில் 20,100,1000 போன்ற பரிசு தொகைகளையுடைய சில சீட்டுகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பில் உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க விஜேசிங்ஹ தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.