தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு “மாற்றத்திற்காக இன்றே செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியொன்று ஆரம்பமாகியுள்ளது
குறித்த விழிப்புணர்வு நடைபவனி யாழ். போதனா வைத்தியசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிறப்பு வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன் தலைமையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியை வைத்தியசாலை பணிப்பாளர் சீ.சத்தியமூர்த்தி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது, மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகளை ஏந்திய வண்ணம் வைத்தியசாலைச் சமூகத்தினர் நடைபவனியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் விழிப்புணர்வு கருத்தாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், நடைபவனியில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.