தம்பலகாமம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் உண்டியல் கொள்ளை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, தம்பலகாமம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக உண்டியலிலுள்ள பணம் எடுக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.