இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நட்புறவுப்புகைப்படக் கண்காட்சி

Report Print Mubarak in சமூகம்

இலங்கை மற்றும் சீனாவுக்குமிடையிலான இராஜதந்திர நட்புறவின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நட்புறவுப்புகைப்படக் கண்காட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகமும் ஸ்ரீலங்கா சீனா நட்புறவு சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த புகைப்படக் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.