மன்னார் - மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியபண்டிவிரிச்சானில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல வளாகத்துக்குள் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து அந்த பிரதேச இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டதன் அடிப்படையில், பொலிஸ் நிலையம் அமைக்கும் பணியை இடை நிறுத்தி மாற்று இடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது துயிலுமில்லத்துக்கு முன்பாக வழங்கப்பட்ட மாற்றிடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.