தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பொங்கள் பொதிகள் தற்காலிக வர்த்தகர் சங்கத் தலைவர் இராசரட்ணம் கிரிதரனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தனது சொந்த நிதியிலிருந்து இராசரட்ணம் கிரிதரன் 50 ஊழியர்களுக்கு பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் பொதிகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.