கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களை போல் இல்லாமல் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லையென வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை தொடர்ந்து மக்கள் மீள்குடியேறி எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும், மீள்குடியேறிய மக்களினுடைய வாழ்வியலில் காணப்படுகின்ற துன்பங்கள் இதுவரை நீங்கவில்லை.
குறிப்பாக காணாமல்போனவர்களினுடைய போராட்டம் தொடர்கின்றது. இதேபோல வறட்சி மற்றும் இயற்கையின் தாக்கங்கள் விவசாயிகள் மட்டத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த காலத்தை போன்று இம்முறை தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை.
பொருட்களை கொள்வனவு செய்பவர்களுடைய தொகை மிகக்குறைவாக இருப்பதுடன், இதனால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.