கடலில் மூழ்கி காணாமல் போன மாணவன்

Report Print Steephen Steephen in சமூகம்

பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மூன்று மாணவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, இரண்டு மாணவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரை கடற்படையினர் காப்பற்றி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாணந்துறை திப்பெத்த பிரதேசத்தை 17 வயதான மாணவன் காணாமல் போயுள்ளார். பொலிஸார், கடற்படையினர், பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.