புலிகளின் சின்னத்துடன் கூடிய புத்தகமும் துப்பாக்கிகளும் தெற்கில் மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உட்பட ஆயுதங்களை காலி கரந்தெனிய மடக்கும்புர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து தாம் கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் கூடிய புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

148 தோட்டக்கள், ரி.56 ரக துப்பாக்கிக்கான ரவை, நான்கு செல்போன்களும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஆயுதங்களுடன் 37 வயதான நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.