யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவனேசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவனேசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மல்லாவியில் உள்ள அனஞ்சயன் குளம் மயானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி அரச படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இவருக்கு விடுதலைப்புலிகளால் மாமனிதர் என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.