மனைவியை தாக்கி காயப்படுத்தியவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு?

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - நிலாவெளி பகுதியில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி காயப்படுத்திய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமில குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாம்பல்தீவு, எட்டாம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கூலி வேளை செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது வடிசாராயத்தினை குடித்து விட்டு வந்து கிரிக்கெட் மட்டையால் மனைவியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபருக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நேற்று முன்தினம் இரவு அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்கான மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.