காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் சுழியோடிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

முல்லைத்தீவு - நாயாற்று கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணிகளில் சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலாபத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவேல் மிரண்டா மற்றும் 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா ஆகிய மூன்று பேர் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.

அன்று இரவு வரை அவர்கள் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கோரிக்கைக்கு அமைய, விமானப்படையினரின் உலங்கு வானூர்திகள் மூலம் இன்று காலை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், மீனவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், சுழியோடிகள் கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.