அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களிடம் சீ.ஐ.டி விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்ட 26 பேரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 பேரும் சுவிட்சர்லாந்திலிருந்து 11 பேரும் என குறித்த 26 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.