பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தரை தாக்கிய நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம்.ஹம்ஸாவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோமரங்கடவெல, பன்சலவெவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடமையின் நிமித்தம் சென்ற புலனாய்வு உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளினால் திட்டி தாக்கிய நிலையில், செவ்வாய் கிழமை(13) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.