போதைப் பொருளுடன் தந்தையும் மகனும் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

முச்சக்கர வண்டியில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற தந்தையும் மகனும் அத்துருகிரிய ஹபரகட பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் பெறுமதியான 70 ஹெரோயின் பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். 4.8 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் தந்தை மற்றும் மகன் அத்துருகிரிய ஹபரகட பிரதேசத்தில் வீடொன்றை விலைக்கு வங்கி அங்கிருந்தவாறு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.