கிளிநொச்சி பட்டதாரிகளின் நேர்முகத் தேர்வுகளுக்கான திகதி அறிவிப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுகள் எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறும் என மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 2016ஆம் ஆண்டு தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த 20,000 பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,

31.12.2016இற்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 354 பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை முழுதும் வேலையற்ற 57 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 20 ஆயிரம் பட்டதாரிகளை சேவைகளில் இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும், இதில் சேவைகளில் இணைத்துக்கொள்ளும் பட்டதாரிகள் இரண்டு வருட பயிற்சிக்காலங்கள் சேவையாற்ற வேண்டும் என்பதுடன் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் வயதெல்லை 35ஆகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.