கண்டியில் நடந்த பயங்கரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி

Report Print Shalini in சமூகம்

கண்டி - திகன, ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் தந்தையான புஷ்பகுமார பிரேமதிலக்க (வயது 37), மகள் நவாஞ்சன பிரேமதிலக்க (வயது 13), மகன் கயான் பிரேமதிலக்க (வயது 05) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்னவென்ன இதுவைரயும் தெரியவராத நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணைகளை மெனிக்கின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.