லண்டனில் நடைபெற்ற தமிழ் புதுவருட பிறப்பு நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Ajith Ajith in சமூகம்

லண்டனில் நேற்று நடைபெற்ற தமிழ் புதுவருட பிறப்பு நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.

கொன்சவேட்டிவ் கட்சியின் போல் ஸ்கலி மற்றும் கிங்ஸ்டன் சபையின் தலைவர் கெவின் டேவிஸ் ஆகியோரே இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வு, ஸ்டொன்லிக் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கலி, பிரதமர் தெரேசாமேயின் புதுவருட செய்தியை அறிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டு மனித உரிமை மீறல் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இலங்கையர்கள் அனைவரும் தமது நாட்டுக்கு திரும்ப வேண்டும்.

அங்கு சென்று அவர்கள் சுதந்திரமாக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரித்தானியா, நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிகழ்வில் பங்கேற்ற கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் கெவின் டேவிஸ், இலங்கையின் வட மாகாணத்துக்கும் - ரோயல் போரோ கிங்ஸ்டனுக்கும் இடையில் 9 மாதங்களுக்கு முன் செய்து கொள்ளப்பட்ட 'டுவினிங்' உடன்படிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாட தாம் வடக்கின் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தென்மேற்கு லண்டனின் வர்த்தகக்குழுவொன்று, யாழிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த குழு யாழ்ப்பாணத்துடன் வர்த்தகம், கல்வி, உட்பட்ட பல விடயங்களில் தொடர்புகளை ஏற்படுத்த உள்ளதாகவும் கெவின் டேவிஸ் தெரிவித்துள்ளார்.