மூன்று மாடுகளை திருடிய நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் மூன்று மாடுகளை திருடிய நபரொருவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று உத்தரவிட்டார்.

யூனிட்11, கந்தளாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் புத்தாண்டு தினங்களில் விற்பனை செய்வதற்காக மூன்று மாடுகளை திருடி வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் மாட்டு உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த திருட்டு சம்பவங்களுடன் இருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.