லண்டனில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரி

Report Print Murali Murali in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் புத்தாண்டு சடங்கில் கலந்துகொண்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (16) இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

பிரித்தானியாவின் பிரதான சங்கநாயக்கர், லண்டன் பௌத்த விகாரையின் விகாராதிபதி வண. போகொட சீலவிமல நாயக்க தேரர் இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சம்பிரதாய முறைப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வாதம் வழங்கினார்.

அதன் பின்னர் விகாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன் போது லண்டனில் வசிக்கும் இலங்கையர்களும் விகாரைக்கு வருகை தந்திருந்தனர்.

அவர்களோடு சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.