நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தையடையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி

Report Print Theesan in சமூகம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” இன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து ஆரம்பமான பவனி யாழ்ப்பாணம், கிளிநொச்சி , மாங்குளம் , ஓமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.

இதேவேளை, இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக சென்று மல்லாவி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் பாதையூடாக நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய உள்ளது.

தமிழினப் படுகொலையில் உயிர் நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.