முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தியில் சுடரேற்றிய வெளிநாட்டு பிரஜை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் தீபமேந்திய ஊர்தியில் இன்றைய தினம் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் சுடரேற்றியுள்ளார்.

வவுனியா பஜார் வீதியில் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற குறித்த வெளிநாட்டுப் பெண், முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்துள்ளார்.

வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேற்றிய நினைவுச்சுடரினை ஏற்றி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.