அவர்களின் அறியாமையை எண்ணி இரக்கப்படுகின்றேன்! 7500 ரூபா விவகாரம் தொடர்பில் தவராசா

Report Print Sumi in சமூகம்

மாணவர்களின் அறியாமையை எண்ணி இரக்கப்படுவதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாணசபையினால் நினைவு கூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வட மாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய வடமாகாண எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் நிதி சேகரித்து, வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் நேற்று வைத்து விட்டு சென்றிருந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சி.தவராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “மாணவர்களின் அறியாமையை எண்ணி இரக்கப்படுகின்றேன். இதன் காரணமாகவே குறித்த விடயம் தொடர்பில் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.

வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டில் பாவப்பட்ட பணம்