சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த வெளிநாட்டவர் விமான நிலையத்தில் கைது

Report Print Shalini in சமூகம்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சியராலியோன் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.