கிளிநொச்சியில் போதைப் பொருள் வைத்திருந்த நபர் விளக்கமறியலில்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பளைப்பகுதியில் நான்கு மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இவரை நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.