நான்கு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட நான்கு கைத்துப்பாக்கிகளுடன் நான்கு பேரை எல்பிட்டிய பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தினதான, கொடஹேன, திலக்கபுர, கொபோதுடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இவர்களிடம் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள், அவற்றுக்கான 12 தோட்டக்கள், 5 வாள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.