கேரளா கஞ்சா வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்வக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இருவரை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜயா நகர், குச்சவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், இறக்கக்கண்டி, நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களின் வீட்டில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது இரண்டு கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களுக்கெதிராக ஏற்கனவே கஞ்சா விற்றமை, வைத்திருந்தமை போன்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த சந்தேக நபர்களை பொலிஸர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.