கொழும்பில் இருந்து சென்ற பேருந்து முல்லைத்தீவில் விபத்து!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து முள்ளியவளை குளமுறிப்பு பிரதான வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்த 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.