நீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இளைஞரை நீதிமன்ற பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியைச்சேர்ந்த பாரூக் முகம்மட் இம்றாஸ் (21வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வருகை தந்திருந்த இளைஞரொருவர் மூன்று தடவைக்கு மேல் நீதிமன்றத்திற்கு உள்ளே சென்று வந்த ​வேளை அவர் மீது பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 700மில்லி கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை துறைமுக பொலிஸில் தடுத்து வைத்துள்ளது.

இதேவேளை அவரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.