பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன்: விளக்கமறியலில் வைத்தது நீதிமன்றம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சீனக்குடா பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

கொட்டுவ வீதி, சமூத்திராகம, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பதினைந்து வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுமியை மாத்தறை பகுதிக்கு அழைத்துச் சென்று தங்கியிருந்துள்ளார்.

இந் நிலையிலே சிறுமியின் பெற்றோர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை வரவழைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.