குடித்துவிட்டு நபரொருவர் செய்த மோசமான காரியம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சாராயம் குடித்துவிட்டு, 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்த நபரொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி, வடலைக்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் மது பாவனைக்கு அடிமையானவர், அவர் தினமும் மது அருந்தி விட்டு பிரச்சினை செய்வதுடன், 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.