வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்ரம பதவியேற்பு

Report Print Theesan in சமூகம்

வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்ரம பதவியேற்றுள்ளார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் அணி நடை மரியாதையுடன் ஆரம்பமான நிகழ்வின் பின்னர் சமயத் தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.