ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - அக்போபுர பிரதேசத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா பொதியுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் அதிகாலை கைது செய்துள்ளனர்.

இதில், சேருநுவர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரையும், வான்எல பகுதியைச் சேர்ந்த ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கந்தளாய் அக்கோபுர பகுதியில் இருந்து ஹபரனைக்கு கொண்டு செல்வதற்காக ஒன்றரை கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் காத்துக்கொண்டிருந்த நிலையிலேயே அக்போபுர போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரகள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.