பெண்ணொருவரை தாக்கிய நான்கு இளைஞர்கள் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பழைய குரோதம் காரணமாக பெண்ணொருவரை தாக்கி காயப்படுத்திய நான்கு இளைஞர்களை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 21,32,17 மற்றும் 25 வயதுடைய நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் கணவருடன் ஏற்பட்ட பழைய குரோதம் காரணமாக நால்வரும் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் கணவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் நான்கு இளைஞர்களையும் கைது செய்து மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் வெருகல் கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.