போர்க்களமாக காட்சியளிக்கும் கொழும்பு ரயில் நிலையங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையிலுள்ள ரயில் நிலையங்கள் போராட்ட களமாக காட்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ரயில்வே பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் தற்காலிக சேவைக்காக 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

கோட்டை மற்றும் மருதானையில் இருந்து 19 ரயில்கள் பயணித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக பயணித்த ரயில்களில் ஏற பெருமளவு பயணிகள் போட்டி போட்டு முயற்சித்துள்ளனர்.

இதனை பார்க்கும் போது ரயில் நிலையங்கள் போராட்ட களமாக காட்சி கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.