கடைசி பந்தில் கிடைத்த வெற்றி : இலங்கை ரசிகர்கள் மகிழ்ச்சி

Report Print Vino in கிரிக்கெட்

இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்று அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்­நாட்டு அணி­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரில் விளை­யா­டு­கி­றது.

இதன் முதல் போட்டி இன்று மெல்பேர்னில் நடைபெற்றது, நணைய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 168 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணித்தலைவர் பின்ச் 43 , கிளிங்கர் 38, ஹீட் 31, ஹென்றிஹுஸ் 17, டேன்னர் 18, போக்கனர் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் மலிங்க 2 விக்கெட்டுக்களையும், பண்டார, குணரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்டினை இழந்து தடுமாறினாலும், பின்னர் ஜோடி சேர்ந்த டிக்வெல, முனவீர அணிக்கு நம்பிக்கையளித்தனர்.

மேலும் இலங்கை அணி சார்பில் குணரத்ன 52 ஓட்டங்களையும், முனவீர 44 , டிக்வெல 30 ,ஸ்ரீவர்தன 15 மற்றும் இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய சாமர கப்புகெதர 10 ஓட்டங்களையும் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணிசார்பில் சம்பா , டேர்னர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக அசேல குணவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த காலங்களாக இலங்கை அணி தோல்வியினை தழுவந்த நிலையில் இன்று அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றியை பதிவு செய்துள்ளமையானது, இலங்கை அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Comments