லசித் மலிங்கவிற்கு இந்திய தொழிலதிபரால் கிடைத்த கௌரவம்

Report Print Vino in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை அணியின் வீரரான லசித் மலிங்கவிற்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் 10ஆவது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போதே இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன், இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய 3 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங் மற்றும் லசித் மலிங்க ஆகியோருக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments