ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!

Report Print Nivetha in கிரிக்கெட்
advertisement

2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

2018 ஆசியப் போட்டியில் 493 விளையாட்டுகள் 431-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங் போன்ற விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஆசியப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிர்வாகிகள் கூறுகையில், இந்தோனேசிய விளையாட்டுகளுக்கும், ஒலிம்பிக்கில் உள்ள 28 விளையாட்டுகளுக்கும் வரும் 2018-ம் ஆசியப் போட்டிகளில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

- Vikatan

advertisement

Comments