ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்! 13 வயது சிறுவன் சாதனை!

Report Print Samy in கிரிக்கெட்
advertisement

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ரொபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ரொபின்சன்.

குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ரொபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது.

ரொபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது கூடுதல் சிறப்பு. அதாவது, ரொபின்சன் எடுத்து ஆறு விக்கெட்களையும் போட்டியின் நடுவராக மைதானத்திற்குள் இருந்து பார்த்தவர் அவரது தந்தை ஸ்டீபன்.

ரொபின்சனின் தாய் ஹெலன்தான் அந்தப் போட்டியின் ஓட்ட எண்ணிக்கைகளை குறித்து வைத்துக் கொண்டிருந்தார். இதனால், ரொபின்சன் நிகழ்த்திய சாதனையை குறித்து வைத்தது அவரது தாய்தான்.

மேலும், ரொபின்சனின் தம்பி மேத்யூஸ் களத்தடுப்பு செய்ய, அவர்களது தாத்தா க்ளென் பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து இதைப் பார்க்க என்று ரொபின்சன் குடும்பத்தினர் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

- Vikatan

advertisement