வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் திருவெம்பாவை இறுதி தீர்த்தோற்சவம்!

Report Print Reeron Reeron in கலாச்சாரம்

வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் இவ்வருடத்திற்கான திருவெம்பாவை இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்றைய தினம் இடம்பெற்றது.

திருவெம்பாவை விரதமானது கடந்த 02ஆம் திகதி அன்று அனைத்து ஆலயங்களிலும் 10 நாட்களை கொண்ட பூசையாக இடம்பெற்றது.

இறுதி நாளாகிய இன்றைய தினம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் பேராலயத்தில் திருவாதவூரர் அடிகளார் புராணம் பாடப்பட்டு விசேட இறுதி நாள் பூசைகள் இடம்பெற்றது.

“திருவாதிரையும் ஒருவாய் அமுதும்” திருவாதிரை விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அதிகளவான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலய நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் ஆலயத்தில் திருபொன் சுன்னம் இடித்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பத்துப் பாடல்கள் பாடப்பட்டது.

திருப்பொன் சுன்னம் இடித்து அம்மன் திருவிழாவும் விசேட பூசைகளும் இடம்பெற்றன. இன்று அதிகாலை வேளையில் ஊர்வலம் இடம்பெற்றது.

இன்றைய தினம் திருப்பொன் ஊஞ்சல் ஆடும் விசேட பூசையுடன் கூடிய நிகழ்வும் ஆலயத்தில் இடம்பெற்றது.

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழா மற்றும் திருவெம்பாவை, சித்திர புத்திர நாயனார் கதை போன்ற பல விசேட நிகழ்வுகளில் ஆகம் சார்ந்த ஆகமம் சாராத விசேட பூசைகளை பண்டைய காலம்தொட்டு இற்றையவரைக்கும் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது.

திருவெம்பாவை இறுதி நாளாகிய இன்றைய தினம் பிற்பகல் வேளை ஆகமம் சாராத விசேட பூசை நிகழ்வாக அறக்கட்டி அடித்தல் எனும் விசேட நிகழ்வும் ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின்சமுத்திர தீர்த்தம் களுதாவளைச் சமுத்திரத்தில் நடைபெற்றது.

பிள்ளையார் , சிவன் பார்வதிதேவி, முருகன் வள்ளி, தெய்வயானை, சுவாமிகளின் உள்வீதி வெளி வீதி உலா இடம்பெற்றதோடு களுதாவளை சமுத்திரத்தில் தீர்த்தம் இடம்பெற்றது.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments