செய்திகள் - 18-03-2012
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 09:12 PM]
19வது மனித உரிமை சபையில் நேரடியாக கலந்து கொண்ட பல மனித உரிமை ஆர்வாலர்கள் கலந்து கொள்ளும் கருத்துக்களம்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 08:52 PM] []
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று காலை மட்டக்களப்புசிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள்விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 05:21 PM]
யாழ்.நகர்ப்பகுதியில் புல்லுக்குளத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த, தமிழரசுக் கட்சியின் முன்னாள் செனட்சபை உறுப்பினர் மு.திருச்செல்வத்தின் சிலை நேற்றுமுன்தினம் இரவு விசமிகளால் இடித்து அகற்றப்பட்டிருக்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 04:49 PM]
இலங்கை அரசை போர் குற்றம் தொடர்பில் பொறுப்பு கூறுமாறு பெரும்பாலான சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை உத்தியோக பூர்வமாக இது வரை தெளிவாக வெளிப்படுத்தாத நிலையே தொடர்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 04:38 PM]
யாழ்.நகரிலுள்ள நகைக் கடையொன்றில், நகை வாங்கவென வந்த நபர் சங்கிலியை போட்டு அழகு பார்ப்பதாக பாவனை செய்து கொண்டு, கடையிலிருந்து ஓடி மறைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 04:25 PM]
இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் எனும் மதவாத அமைப்பு திடீர் எதிர்ப்பு காட்டியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 04:13 PM] []
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் கிராமப் புறங்களிற்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுக்க போதுமானளவில் பேரூந்துகள் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பாவிக்க கூடிய பல பேரூந்துகள் கவனிப்பாரற்று விடப்பட்டிருக்கின்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:28 PM]
இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:06 PM]
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கைத் தரப்பினருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஐ.நாவுக்கான பிரதிநிதி பீற்றர் ஸ்பிளினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:55 PM]
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி இன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:20 PM] []
முன்னாள் லண்டன் நகர முதல்வர் Ken Livingston (Labour Party Candidate and the former Mayor of London) உடனான தமிழ் மக்களின் சந்திப்பு நேற்று லண்டன் ஹறோ பகுதியில் அமைந்துள்ள Harrow Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:00 PM] []
உணர்ச்சி வசனங்களை பேசி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வருபவர்களுக்கு உங்கள் வீடுகளிலுள்ள விளக்குமாறை காட்டி விரட்டியடிக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 10:44 AM]
முள்ளிவாய்க்காலின் பேரவலங்கள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் தற்போது நிறைவடைகிறது. முள்ளிவாய்க்காலின் கொடூரங்களை அனுபவித்த மக்களுக்கு மேலும் ஆத்திரம் ஊட்டும் செயலாக இலங்கைத் தீவின் தலைநகரான கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தெருப்பொங்கலும் பால் பொங்கலும் நடைபெற்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 10:31 AM] []
இலங்கைப் போர்க்குற்றம் குறித்து எதிர்வரும் 22ம் அல்லது 23ம் திகதி ஜெனீவா மாநாட்டில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 21ம், 22ம் திகதிகளில் ஐநா முன்றலில் நடத்துவதற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
(2ம் இணைப்பு)
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 09:12 AM] []
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 08:47 AM]
வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 08:44 AM]
அரசாங்கங்கள் நிரந்தரமானவை அல்ல. சுதந்திர நாட்டில் எந்தவொரு தரப்பினரும் ஆட்சி பீடம் ஏற முடியும். அதில் எவ்வித தடையும் கிடையாது.  என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 08:40 AM]
நாட்டை பிளவுபடுத்த தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 07:45 AM]
வெளிநாட்டு சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்க நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 07:40 AM]
இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 07:10 AM] []
வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள கட்டடமொன்று, நேற்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக  வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 06:57 AM]
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புச் செய்யும் உரிமையை பெற்றுக் கொள்வதற்கு, ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசை முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 06:42 AM]
ஈரானிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதியுடன் முடிவடைவதால், ஈராக்கிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:40 AM]
நாட்டில் எதிர்பார்த்தளவு பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியாது என்றும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் எனவும்  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:31 AM]
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியான வீதிப் போக்குவரத்து சட்டங்கள் கிடையாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:25 AM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு கூடுதலான ஆதரவு காணப்படுவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 03:07 AM] []
உலகம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில், இன்று பிரான்சில் பல்லின மக்கள் அமைப்புகள் , பல மனிதவுரிமை அமைப்புகள், பல அரசியல் கட்சிகளின், ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட மாபெரும் ஊர்வலத்தில் தமிழீழ மக்களும் பங்கு கொண்டனர்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 02:40 AM] []
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி புதியதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவை உடனடியாகவே அரசாங்கம் நிராகரித்துள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 02:09 AM] []
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் போர்க் குற்றங்கள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எவ்வித பதிலையும் அளிக்காமல் விலகிச் சென்றார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 02:09 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை வைத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 01:44 AM]
பாகிஸ்தானின் கூட்டுப்படைகளின் தலைவரான ஜெனரல் காலித் சமீம் வைன் நான்கு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 01:04 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், அது இலங்கையிலுள்ள தமிழர்களைக் காயப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:57 AM] []
உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சனல் 4 தொலைக்காட்சி!  நெஞ்சில் ஈரம் உள்ளவர்களைக் கண்ணீர் வடிக்கவும், இரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:44 AM] []
கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:39 AM]
ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுக் கூட்டத்​தில், அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்� என்று தி.மு.க. உள்பட அனைத்து தமிழகக் கட்சிகளும் போர்க்குரல் எழுப்புகின்றன. அதே சமயம், 'இந்தத் தீர்மானம் தமிழர்​களுக்கான நீதியைப் பெற்றுத் தராது� என்று ஈழத் தமிழர் ஆதரவு தமிழின அமைப்புகள் மாறுபட்ட குரலை எழுப்புகின்றன.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:29 AM]
கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில், முச்சக்கரவண்டி உரிமையாளரினால் கத்திக்குத்திற்கிலக்கான நபரொருவர் அவசர சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:24 AM]
யாழ்.நகரிலுள்ள இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்தில், திருடமுற்பட்ட இளைஞர் ஒருவரை வர்த்தகர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் யாழ்.பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:10 AM] []
ஜெனிவா ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனிஅமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு.
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 12:06 AM] []
யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து, சமூகத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வலது குறைந்தோரை பராமரிப்பதற்காக லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதியுதவியுடன் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு மட்டக்களப்பு கல்லடியில் பராமரிப்பு இல்லம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளது.
Advertisements
[ Wednesday, 10-02-2016 01:21:58 ]
இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது.