செய்திகள் - 24-03-2012
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 08:43 PM] []
ஈ.பி.ஆர்.எல்.எப்.அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்டதலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மட்டக்களப்பில்இடம்பெற்றுள்ளது.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 04:31 PM] []
இலங்கையில் போரின்போது நடைபெற்ற யுத்த மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதற்கு சர்வதேச நாடுகள்  தனது பலமான ஆதரவை வழங்கியுள்ளதை தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் வெளிப்படுத்தி நிற்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 04:00 PM]
இலங்கையின் பொருளாதார செயற்திட்டங்களின் போது இந்தியாவுக்கு தேவையற்ற சலுகைகளை அளித்து அந்நாட்டுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 03:52 PM]
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும், அகதிகள் முகாம்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 02:44 PM]
ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 02:08 PM] []
உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 01:49 PM]
இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 01:04 PM]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 12:21 PM]
வடகிழக்கு பகுதிகளில் கடந்த காலங்களில் இயங்கிவந்த சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்பு செய்யும்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 09:38 AM]
தமிழீழத் தனிநாடு உருவாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக 1985-ல் செயல்பட்ட "டெசோ" அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 09:37 AM]
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின்  மாநாட்டில் கலந்து கொள்ளவென சென்றிருந்த இலங்கை குழுவினர் இன்று சனிக்கிழமை காலை நாடு திரும்பியுள்ளனர்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 08:46 AM]
இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பில் இன்னும் போதுமான அளவில் கவனம் செலுத்தவில்லை எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் பார்ட் குற்றம் தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 08:26 AM]
ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 08:12 AM]
யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் தீப்பிடித்து எரிந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 08:01 AM] []
யாழ்.மண்டைதீவில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவரும் நிலையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 07:50 AM]
கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் பிரதேசத்தின் கோட்டைகட்டிய குளம் பகுதியில் சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த குடும்பஸ்தரை கைதுசெய்யாமலும், மக்கள் தண்டிப்பதற்கு இடமளிக்காமலும் பொலிஸார் பாதுகாத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 07:42 AM]
ஐ. நாவின் மனிதவுரிமைகள் பேரவையில் இடம்பெற்ற விவாதங்களை தொலைக்காட்சியில் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று யாழ்.மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 07:07 AM]
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்கவின் மெயப்பாதுகாப்புப் பிரிவில் செயற்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை உயிரிழச்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 06:56 AM]
தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 06:43 AM]
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொக்கரித்துள்ளார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 06:30 AM]
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 06:19 AM]
கிழக்கை வடக்குடன் இணைப்பதா அல்லது இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 03:31 AM]
கொள்ளுபிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில், ஓடும் ரயிலில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 02:02 AM]
சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பினைப் பெற்று சென்ற இலங்கையைச் சேர்ந்த 92 பேர் தற்போது அனாதரவான நிலையில், சவுதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 02:02 AM]
தலைமைத்துவ பயிற்சிகளின் போது 553 மாணவ, மாணவியர் உபாதைகளுக்கு உள்ளானதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 02:01 AM]
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 12:57 AM]
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 12:55 AM]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக  கொண்டு வந்த தீர்மானம் வெற்றிபெற்ற கையுடன், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 12:40 AM]
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் முடிவு.
[சனிக்கிழமை, 24 மார்ச் 2012, 12:02 AM]
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாகவும், எனினும், எப்பொழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிய இடம்தரப் போவதில்லை எனவும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Advertisements
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.